எவரேனும், ஒரு வேட்பாளரின் எழுத்து மூலமான பொது அல்லது சிறப்பு அனுமதியின்றி, ஏதாவதொரு பொதுக்கூட்டம் நடத்துவதற்காக செலவு செய்தால் அல்லது செலவை அனுமதித்தால் அல்லது அத்தகைய வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை மேம்படுத்தும் அல்லது பெறும் நோக்கத்திற்காக, ஏதாவதொரு விளம்பரம், சுற்றறிக்கை அல்லது பிரசுரம் அல்லது வேறு எந்த வகையிலுமான ஏதாவதொரு வழி மூலமாகச் செய்தால், ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், யாரேனும் ஒரு நபர், அனுமதியின்றி ரூபாய் பத்துக்கு மிகாத ஏதாவதொரு அத்தகைய செலவுகளைச் செய்த பின்பு அத்தகைய செலவுகளைச் செய்ததிலிருந்து பத்து நாட்களுக்குள் வேட்பாளரிடமிருந்து எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றால், அவர் வேட்பாளரின் அனுமதியோடுதான் அத்தகைய செலவுகளைச் செய்தார் என்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.