எவரேனும், ஒரு தேர்தல் முடிவைப் பாதிக்க வைக்கும் உள்நோக்கத்துடன், யாரேனும் ஒரு வேட்பாளரின் நடத்தை அல்லது குணவியல்பு சம்பந்தமாக உண்மையான கூற்றாகத் தோன்றும் ஒரு பொய்யான கூற்றை மற்றும் அவருக்கு அக்கூற்று பொய்யானதெனத் தெரிந்தும் அல்லது நம்பியும் அல்லது அக்கூற்று உண்மையென்று அவர் நம்பாதிருக்கும்போது, அதைக் கூறினால் அல்லது பிரசுரித்தால், அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.