தேர்தலில் தவறான செல்வாக்கு அல்லது ஆள்மாறாட்டத்திற்கு தண்டனை.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171F (IPC Section 171F in Tamil)
எவரேனும் ஒரு தேர்தலில் தகாத செல்வாக்கு செலுத்துதல் அல்லது ஆள்மாறாட்டக் குற்றத்தைப் புரிந்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.