எவரேனும், கையூட்டுக் குற்றத்தைப் புரிந்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், விருந்து போன்றவற்றை அளிக்கும் கையூட்டுக் குற்றம், அபராதத்துடன் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்.
விளக்கம்:-"விருந்து போன்ற" என்பதான கையூட்டு என்பது, உணவு, பானம், கேளிக்கை, அல்லது ஒரு தேவையை நிறைவு செய்தல் என்ற வடிவிலான கையூட்டின் வகை எனப் பொருள்படும்.