(1)எவரேனும்:-
(i )ஏதாவதொரு தேர்தல் உரிமையைப் பயன்படுத்த யாரேனும் ஒரு நபரை அல்லது யாரேனும் ஒரு பிற நபரைத் தூண்டிவிடும் உள்நோக்கத்துடன் அல்லது ஏதாவதொரு அத்தகைய உரிமையைப் பயன்படுத்திய யாரேனும் ஒரு நபருக்கு வெகுமதியளிக்கும் நோக்கத்துடன், யாரேனும் ஒரு நபருக்கு ஒரு கையூட்டு அளித்தால் அல்லது
(ii )ஏதாவதொரு அத்தகைய உரிமையைப் பயன்படுத்தியதற்காக அல்லது ஏதாவதொரு அத்தகைய உரிமையை பயன்படுத்த தூண்டிவிட்டமைக்கு அல்லது யாரேனும் பிற நபரை தூண்டிவிட முயற்சி செய்தமைக்கு, தனக்காகவோ அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்காகவோ, ஏதாவதொரு கையூட்டை ஒரு வெகுமதியாகவோப் பெற்றால்,
கையூட்டு பெறுதல் குற்றத்தைப் புரிகிறார்.
இருப்பினும், ஒரு பொதுக் கொள்கையைப் பிரகடனப்படுத்துதல் அல்லது பொதுச் செயலுக்கு ஒரு உறுதி அளித்தல் ஆகியன இச்சட்டப்பிரிவின் படி ஒரு குற்றமாகாது.
(2).ஒரு நபர், ஒரு கையூட்டை அளித்தல், அல்லது அளிக்க இசைதல் அல்லது அதைப் பெற்றுத்தாரல் அல்லது பெற்றுத்தர முயற்சி செய்தல் என்பது கையூட்டு ஒன்றை அளிப்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.
(3).ஒரு நபர், ஒரு கையூட்டை பெறுதல் அல்லது பெற சம்மதித்தல் அல்லது பெற்றுக்கொள்ள முயற்சித்தல் என்பது, ஒரு கையூட்டைப் பெற்று கொண்டதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும், மற்றும் ஒருநபர், அவர் செய்ய எண்ணப்படாததை செய்வதற்கு, அல்லது அவர் செய்யாததை செய்ததற்கு நோக்கமாக, ஒரு கையூட்டைப் பெறுதல் என்பது அக்கையூட்டை ஒரு வெகுமதியாக பெற்றுக் கொண்டதற்கு நிகரானக் கொள்ளப்பட வேண்டும்.