இந்த அத்தியாயத்தின் நோக்கங்களுக்காக:-
(a )."வேட்பாளர்" என்பது, ஏதாவதொரு தேர்தலில் ஒரு வேட்பாளராக முன்மொழியப்பட்டிருக்கும் ஒரு நபர் என பொருள்படும்.
(b )."தேர்தல் உரிமை" என்பது, ஒரு தேர்தலில் ஒரு வேட்பாளராக நிற்பதற்கு அல்லது நிற்காமலிருப்பது அல்லது வேட்பைத் திரும்ப பெறுவதற்கு, அல்லது வாக்கைப் பதிவதற்கு அல்லது வாக்கைப் பதிவு செய்யாமலிருப்பதற்கான ஒரு நபருக்குள்ள உரிமை என பொருள்படும்.