ஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், அவர் எந்த முறையில் அவரை நடத்திக்கொள்ள வேண்டுமோ, அந்த சட்டத்தின் ஏதாவதொரு கட்டளைக்கு தெரிந்தே கீழ்ப்படியாதிருந்து அத்தகைய கீழ்ப்படியாமையினால் யாரேனும் ஒரு நபருக்குத் தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்தில், அல்லது அநேகமாக அவர் விளைவிப்பார் என தெரிந்தே விளைவித்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்ற அலுவலர், ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தால், Z என்பவருக்கு ஆதரவாக கூறப்பட்ட ஒரு தீர்ப்பாணையை நிறைவேற்றும் பொருட்டு, அந்நிறைவற்றலில் சொத்தை எடுப்பதற்கு சட்டத்தால் கட்டளையிடப்பட்டிருக்கும் போது, Z க்கு அவர் அநேகமாக தீங்கு விளைவிக்கலாம் என்ற தெரிதலுடன், சட்டத்தின் அந்த கட்டளைக்குத் தெரிந்தே கீழ்ப்படியாதிருக்கிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைA புரிந்திருக்கிறார்.