எவரேனும், பொது அமைதிக்கு ஒரு பங்கத்தை அநேகமாக விளைவிக்கும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஏதாவதொரு கும்பலில், அத்தகைய கும்பல் கலைந்து செல்வதற்கு சட்டப்படியான உத்தரவிடப்பட்டிருப்பதற்குப் பின்னர் தெரிந்தே சேர்ந்தால் அல்லது தொடர்ந்திருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும்.
விளக்கம்:-அந்தக் கும்பலானது, சட்டப்பிரிவு 141 இன் பொருளின்படியான ஒரு சட்டவிரோதமான கும்பலாயிருந்தால், குற்றம் புரிந்தவர் சட்டப் பிரிவு 145 இன் கீழ் தண்டிக்கப்படக் கூடும்.