சட்ட விரோதமாகக் கூடியுள்ள கூட்டத்தைக் கலந்து செல்லுமாறு போலீசார் உத்தரவிடலாம். அந்த உத்தரவுக்குப் பிறகும் கலையாமல் இருக்கும் சட்டவிரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கலைந்து செல்வதற்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றதைத் தெரிந்தும், சட்டவிரோதமான கும்பலில் சேர்தல் அல்லது தொடர்ந்திருத்தல்எவரேனும் ஒரு சட்டவிரோதமான கும்பல், சட்டத்தால் வரையறுக்கப் பட்டுள்ள முறையில் கலைந்து செல்வதற்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது என தெரிந்த, அத்தகைய சட்டவிரோதமான கும்பலில் சேர்ந்தால் அல்லது தொடர்ந்திருந்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும்.