எவரேனும், இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப் படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால் கலகம் புரியப்படத் தூண்டி, அத்தூண்டுதலின் விளைவில் கலகம் புரியப்பட்டால், மரண தண்டனையுடன் அல்லது ஆயுள் சிறைத் தண்டனை அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.