எவரேனும், சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைப் புரிவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக உதவி செய்யக்கூடும் என தெரிந்தே.
அத்தகைய குற்றத்தைப் புரிவதற்கான ஒரு திட்டமிடல் இருப்பதை, ஏதாவதொரு செயல் அல்லது சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால் தன்னிச்சையாக மறைத்தால், அல்லது அத்தகைய திட்டத்தின் பொருட்டு பொய்யானதென அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு வெளிப்படுத்தலைச் செய்தால்,
குற்றம் புரியப்பட்டால்:-
அக்குற்றம் புரியப்பட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய சிறைத்தண்டனையுடன் மிக நீண்ட கால அளவில், நான்கில் ஒரு பகுதிக்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்;
குற்றம் புரியப்படாவிட்டால்:-
மற்றும், அக்குற்றம் புரியப்படாவிட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய சிறைத்தண்டனையுடன் மிக நீண்ட கால அளவில், எட்டில் ஒரு பகுதிக்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்;