(1).எவரேனும், மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை அல்லது இரண்டு வருடங்கள் அல்லது வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஒருகால அளவிலான கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தை புரிவதற்கான ஒரு குற்றச் சதிக்கு ஒரு தரப்பாக இருந்தால், அத்தகைய ஒரு சதியின் தண்டனைக்காக இச்சட்டத்தில் வெளிப்படையான ஷரத்து செயப்படாமலிருக்கும்போது, அத்தகைய குற்றத்தை அவர் தூண்டிவிட்டதைப் போன்றே, அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
(2).எவரேனும் மேற்கூறப்பட்டவாறாக தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைப் புரிவதற்கான ஒரு குற்றச் சதியை தவிர, பிற ஒரு குற்றச் சதிக்கு ஒரு இருந்தால், ஆறு மாதங்களுக்கு மிகாத ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.