எந்தஒரு நபர், எந்தஒரு செயல் இந்தியாவில் புரியப்பட்டால் ஒரு குற்றமாக ஆகுமோ எந்தஒரு செயலைப் புரிவதற்கு இந்தியாவில் இல்லாமல் மற்றும் இந்தியாவிற்கு வெளியே தூண்டினால், அந்நபர் இச்சட்டத்தின் பொருளின்படி, இந்தியாவில் ஒருகுற்றத்தை தூண்டிவிடுகிறார்.
எடுத்துக்காட்டு
இந்தியாவிலுள்ள A என்பவர், கோவாவில் உள்ள ஒரு வெளிநாட்டவரான B என்பவரை கோவாவில் ஒரு கொலையைப் புரிவதற்குத் தூண்டிவிடுகிறார்.கொலையைத் தூண்டிவிட்டதற்கு A குற்றவாளியவார்.