நமது சொத்துக்களை கொள்ளை அடிக்கவரும் போதும், இரவு நேரத்தில் வீட்டை இடித்து, உடைத்து உள்ளே நுழைய எத்தனிக்கும் போதும், தீ வைத்து சொத்துக்களை அளிக்க முனையும்போதும், திருடுவதற்காக அல்லது தொல்லை தருவதற்காக அத்துமீறி நம்மிடத்தில் நுழைய முயற்சி செய்யும்போதும் அந்த முயற்சியால் நமக்கு நம்மை அண்டியுள்ளவர்களுக்கும் மரணம் சம்பவிக்கலாம். என்ற அச்சம் ஏற்படும்போதும், அத்தகைய எதிரியை நாம் தாக்கி, அதனால் எதிரிக்கு மரணம் சம்பவித்தாலும் அதனை குற்றமாக கொள்ள முடியாது. அந்த செயல் தற்காப்புக்காக செய்யப்பட்டதாகவே கருதப்படவேண்டும். சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமை, எப்போது மரணத்தை விளைவிப்பதற்கு நீட்டிக்கிறதுஅக்குற்றமானது, சட்டப்பிரிவு 99 இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்கீழ், அதைப் புரிவதற்கு, அல்லது அதைப் புரிய முயற்சிப்பதற்கு, இதன்பின்பு வரிசைப்படுத்தப்பட்ட விவரிப்புகளில் ஏதாவதொன்றிலான ஒரு குற்றமாவது இருந்து அவ்வுரிமையைப் பயன்படுத்தும் சூழ்நிலையில் இருக்கிறதோ, அதற்கு, சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, தவறு இழைப்பவருக்கு மரணம் அல்லது ஏதாவதொரு பிற தீங்கை தன்னிச்சையாக விளைவிப்பதற்கு நீட்டிக்கிறது.அவையாவன:-
முதலாவதாக:-கொள்ளை;
இரண்டாவதாக :-இரவில் வீட்டில் -கன்னமிடல்;
மூன்றாவதாக :-எந்தஒரு கட்டிடம், கூடாரம் அல்லது கலம் ஒரு மனித வசிப்பிடமாக, அல்லது சொத்தின் பாதுகாப்பிற்கான ஒரு இடமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த ஏதாவதொரு கட்டிடம், கூடாரம் அல்லது கலத்தின்மீது தீயினால் புரியப்பட்ட வன்குறும்பு;
நான்காவதாவது :-அத்தகைய தனிநபர் தற்காப்புஉரிமை பயன்படுத்தப்படாவிட்டால், மரணம் அல்லது கொடுங்காயம் அதன் விளைவாகும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு அச்சத்தை விளைவிக்கலாமென்ற அத்தைகைய சூழ்நிலைகளின்கீழான திருட்டு, வன்குறும்பு அல்லது வீட்டில்-அத்துமீறல்.